டீ கே பி உள்ளிட்ட அறுவர் மீண்டும் விளக்கமறியலில்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டீ கே பி தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் அறுவரையும் விடுதலை செய்யுமாறும் முன்வைக்கப்பட்ட சட்ட கோரிக்கை மனுவை எதிர்வரும் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ ஆர் ஆர் ஹெயின்துடுவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் போகச்செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE