டிரோன் தொழில்நுட்பம் : வியப்பில் ஆழ்த்தும் விசித்திர தகவல்கள்!

ஆளில்லா வானூர்தி அமைப்பு, டிரோன் அல்லது பல்வேறு இதர பெயர்களை கொண்டிருக்கும் வானியல் பறக்கும் இயந்திரம் உலகெங்கும் பொதுவாக டிரோன் என அழைக்கப்படுகின்றது. துவக்கத்தில் சிக்கலான மற்றும் ஆபத்துகள் நிறைந்த ராணுவ திட்டங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டன.

வணிக ரீதியாக பல்வேறு வளர்ச்சிகளைக் கடந்திருக்கும் டிரோன் தொழில்நுட்பம் இன்று பல்வேறு இதர விடயங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. டிரோன்களைச் சார்ந்து பெரும்பாலானோரும் அறிந்திராத சில விசித்திர தகவல்களை தான் ஸ்லைடர்களில் தொகுத்திருக்கின்றோம்..

ஆயுதங்களைக் கொண்ட முதல் டிரோன் ஒசாமா பின்லேடனை பிடிக்க வடிவமைக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்க வானத்தில் மொத்தம் 30,000 டிரோன்கள் பறந்து கொண்டிருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

டிரோன்களில் பதிவு செய்யப்படும் தகவல்களை மேம்படுத்த வான் படையில் மொத்தம் 65,000 முதல் 70,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

விண்வெளி திட்டங்கள் அழியும் தருவாயில் இருப்பதால் கேப் கார்னிவல் பகுதி தற்சமயம் டிரோன் தளமாக இருக்கின்றது.

நியூ யார்க் நகரில் நாள் ஒன்றைக்கு டிரோன்களை $30 செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

கடந்த மூன்றாண்டுகளாக அமெரிக்க-மெக்சிகோ எல்லைகளில் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

பல்வேறு நகரங்களைச் சேர்ந்த காவல் துறையினர் டிரோன்களை கண்காணிப்பு பணிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

2015 ஆம் ஆண்டில் ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் டிரோன் பயன்படுத்தி திருமண காணொளியினை படமாக்கினார்.

டிரோன்களை பயன்படுத்தி பொருட்களை விநியோகம் செய்யும் வழிமுறைகளுக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இதய நோயாளிகளுக்கு அவசரக் காலத்தில் பயன் தரும் வகையில் டிரோன் ஆம்புலன்ஸ் எனும் புதிய வழிமுறையினை ஸ்டீஃபென் ரெய்பௌர் கண்டுபிடித்தார்.

SHARE