இலங்கை அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவர் இன்று தெரிவு!

இலங்கை கிரிக்கட் அணியின், ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் இன்று தேர்வு செய்யப்படவுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட் இதனை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்பே அணிகள் பங்கு கொள்ளும் முக்கோண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடர் பங்களாதேஷில் இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில், அந்த போட்டிகளில் பங்கு கொள்ளும் இலங்கை அணியின் தலைவர் தேர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அல்லது தினேஸ் சந்திமால், இருவரில் ஒருவர் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக தெரிவு செய்யப்படலாம் என கிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE