இலங்கை அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ்

இலங்கை கிரிக்கட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்திவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கு இலங்கை அணியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

அதேவேளை பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட்ட தொடருக்கான இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது.

அதன்படி இலங்கை அணியினரின் விபரம் வருமாறு,

அஞ்சலோ மெத்திவ்ஸ், உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுஷங்க, அகில தனஞ்சய, லக்‌ஷான் சந்தகான், வனிது ஹசரங்க

SHARE