உதவிப் பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொன்டிங் ஒப்பந்தம்!

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கு 20க்கு20 போட்டிகளுக்கான பயிற்சிகளை வழங்குவதற்கு, முன்னாள் அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு எதிராக அவஸ்திரேலிய விளையாடவுள்ள 20க்கு20 தொடரில் அவர் பயிற்சிகளை வழங்கவுள்ளார்.

தலைமைப் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமனுக்கு உதவிப் பயிற்றுவிப்பாளராக ரிக்கி பொண்டிங் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போதும், பொன்டிங் அவுஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE