இன்று இரவு நாட்டின் பல பகுதிகளில் அடை மழை

இன்று இரவு நேரத்தில் சில பிரதேசங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , வடமேல் , சப்ரகமுவ , ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பிரதேசங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாளைய தினத்தில் வடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் .

களுத்துறை , இரத்தினபுரி , காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் , இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும், மின்னலால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.

SHARE