ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் இன்று ஆராய்வு!

2021ஆம் ஆண்டு வரையில் தாம் ஜனாதிபதியாக செயற்பட முடியுமா இல்லையா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கருத்து கோரியமை தொடர்பில் இன்று ஆராயப்படவுள்ளது.

இதன் பொருட்டு ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனக அலுவிஹார, கே.ரீ சித்ரசிறி, சிசுரு டி ஆப்ரு ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற மைத்திரிபால சிறிசேன 9ஆம் திகதி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

அந்த நிலையில், 19ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படல்லை.

இதன்படி 6 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

எனினும் 19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தாம் 2021ஆம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக தடையின்றி பதவி வகிக்க முடியுமா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி, உயர் நீதிமன்றத்திடம் கோரி இருந்தார்.

இது குறித்து இன்றையதினம் ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழு ஆராயவுள்ளது.

SHARE