பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைப்பு

நியூசிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெற்றிராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

13 பேர் கொண்ட அந்த அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE