புதிய தரவரிசையில் முன்னேறிய தினேஸ் சந்திமால்

புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஸ் சந்திமால் முன்னேறியுள்ளார்.

வருட ஆரம்பத்தின் போது அவர் 10 ஆவது இடத்தில் இருந்தார்.

எனினும் புதிய சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் 743 புள்ளிகளை பெற்று 8 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த தரவரிசைப் பட்டியலில் 947 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸமித் உள்ளார்.

இங்கிலாந்து அணியின் வீரர் ஜோ ரூட் 881 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் இந்த தரவரிசைப் பட்டியலில் இரண்டவாது இடத்தில் இருந்த இந்திய அணியின் தலைவர் விராட் கோலி ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.

அவர் 880 புள்ளிகளை பெற்றுள்ளார்.

இதனுடன் இந்திய அணியின் வீரர் புஜாரா 5 ஆவது இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE