கலிபோர்னியாவில் சேற்று நிலச்சரிவில் சிக்கி பெருமளவானோர் மாயம்

தென் கலிபோர்னியாவில் இடம்பெற்ற சேற்றுடன்கூடிய நிலச்சரிவில் பெருமளவானோர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த நிலச்சரிவில் ஆகக் குறைந்தது 15 பேர் பலியாகினர்.

அத்துடன், 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இரண்டு வயது சிறுமி ஒருவர் உள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நூற்றுக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளடன், பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

அடை மழை காரணமாகவே இந்த சேற்றுருடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE