மெட்ரோ ரெயில் சேவை இரவு 11.30 மணி வரை நீட்டிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் வழிபாட்டு தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வார்கள். இதனால் வழக்கமாக இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் பொதுமக்களின் நலன் கருதி இன்று (வியாழக்கிழமை) முதல் 13-ந்தேதி வரை இரவு 11.30 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று வரும் 16-ந்தேதியும் இரவு 11.30 மணி வரை ரெயில் இயக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் முறையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன பொதுமக்கள் தொடர்பு துறை இணை-இயக்குனர் எஸ்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
SHARE