பொருத்தமற்ற இடங்களில் வீதி விளக்குகள் மக்கள் விசனம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால்  அக்கராயன் பிரதேசத்தில் பொருத்தப்படுகின்ற சூரிய சக்தி  வீதி மின் விளக்குகள் பொருத்தமற்ற இடங்களில்  அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன் கிழமை முதல் அக்கராயன் பிரதேசத்தில் பல இடங்களில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால் அவை மக்கள் அமைப்புகளினால் ஏற்கனவே எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு மாறாக   சில தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கின் அடிப்படையில்  பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இதனால் பொது மக்களுக்கோ, பொது பயன்பாட்டிற்கோ அதிகளவு நன்மைகள் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவிக்கும் பொது மக்கள்
தங்களின் பிரதேச பொது அமைப்புகள் வழங்கியுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய வீதி விளக்குகளை  பொருத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கரைச்சி பிரதேச சபையிடம் கோரியுள்ளனர்.
SHARE