21ம் நூற்றாண்டுக்கு தேவையான பொருளாதார நிலைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன – பிரதமர்

21 ஆம் நூற்றாண்டுக்கு தேவையான பொருளாதார நிலமைகளை நாட்டினுள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கிருலப்பனை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்கள் இன்று வெட் வரி மூலமாவது செலுத்தப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் தற்போது எவரும் கேள்வி எழுப்புவதில்லை.

ஜீ.எஸ்.பி பிளஸ் மீள கிடைக்க பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டுக்கு வருகை தருகின்றனர்.

21ம் நூற்றாண்டுக்கு தேவையான பொருளாதார நிலைமைகள் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

SHARE