சரத்குமாரவின் புதல்வர் பிணையில் விடுதலை

ஸ்ரீ லங்கா சுதந்தி கட்சியின் பிரதான அமைப்பாளர் ஆனந்த சரத்குமாரவின் புதல்வர் உள்ளிட்ட இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்றைய தினம் ஆணமடுவ நீதவான் நீதிமன்றின் நீதவான் ஜனனி எஸ் விஜேதுங்கவினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி நவகத்தேகம எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வைத்து 19 வயதுடைய இளைஞர் ஒருவரை குறித்த இருவரும் தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த குறித்த இளைஞர் நவகத்தேகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய ஆனந்த சரத்குமாரவின் புதல்வர் உள்ளிட்ட இருவரை காவல் துறையினர் கைது செய்ததோடு வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த இருவரும் பிணையில் விடுலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆசிரியர் ஒருவரை முழந்தாளிட வைத்தமை தொடர்பில் ஆனந்த சரத்குமார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

SHARE