களனி கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வெல்லம்பிட்டி – கொஹிலவத்தை பகுதியை ஊடறுத்து செல்லும் களனி கங்கையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று அதிகாலையில் குறித்த நபர் கங்கையில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேநகம் வெளியிட்டுள்ளனர்.

44 வயதுடைய கிரிபத்கொடை பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE