இன்று பல பகுதிகளில் பலத்த மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதனுடன் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தொடர்ந்தும் காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

SHARE