சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கிருமி நாசினி மற்றும் பீடி தொகையும் சிக்கின

சட்டவிரோதமாக அரிசிக்கு இடையே மறைத்து வைத்து ஃக்லய்போசெட் என்ற கிருமி நாசினி தொகையுடன் இறக்குமதி செய்யப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றை சுங்க பிரிவினர் இன்று திறந்துள்ளனர்.

இதில் இருந்து 28 ஆயிரம் கிலோ கிராம் ஃக்லய்போசெட் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுமதி சுமார் 32 லட்சம் என சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் மற்றும் பல்வேறு பொருட்களுடன் மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த பீடி இலையுடன் கூடிய இரண்டு கொள்கலன்களை இன்று சுங்க பிரிவினர் திறந்துள்ளனர்.

ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் வைத்தே இந்த பீடி இலை தொகை மீட்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி நான்கரை கோடி ரூபாய் எனவும், இந்த மூன்று கொள்கலனையும் கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இறக்குமதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE