தசநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு பிணை

11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படை பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட 6 பேரை கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

மேல் நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் தலா 10 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணையிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

SHARE