பொறுமையாக காத்திருங்கள் – சாந்த பண்டார கோரிக்கை

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு அமைய தற்போதைய ஜனாதிபதிக்கு 6 வருடங்கள் அந்த பதவியில் வகிக்க தடை ஏதும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் சாந்த பண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 17 ஆம் திகதி ஜனாதிபதியால் பிணை முறி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் வரை பொறுமையாக காத்திருங்கள் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE