இலங்கையின் சுதந்திர நாளை எதிர்த்து லண்டனில் போராட்டம் நடாத்திய நாடு கடந்த தமிழீழ அரசு

இலங்கையின் சுதந்திர நாள் தமிழ் மக்களுக்கு கறுப்பு நாள் என்ற அடிப்படையில் பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக மாலை 3 மணிமுதல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நாடு கடந்த  தமிழீழ அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற
இப்போராட்டத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்குகொண்டதுடன் வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்டாலும் இன்னும் தமிழ் மக்கள் சொந்த நிலத்தில் அடிமைகளாய்த்தான் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

குறிப்பாக தமிழர் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளை புதிதாக முளைக்கின்றன.
மக்களின் காணிகள் சிறு அளவில் விடுவிக்கப்பட இன்னொரு வழியால் நிலா ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றது.
தமிழர்களின் மொழி பண்பாடு என்பவற்றை சிதைத்து போதைப்பொருள் பாவனை போன்றவற்றை தமிழ் சமூகத்தில் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது சிங்கள பேரினவாத அரசு.
தமிழ் மக்களின் தொழில்துறை வளங்களை சுவீகரிப்பதோடு தொழில் சார் சிங்கள குடியேற்றங்களும் தமிழரின் போப்ருண்மிய பலத்தை கீழ் மட்டத்திற்கு கொண்டு செல்கின்றது
இன நல்லிணக்கம் குறித்து சிந்திப்பதற்கான எந்த ஒரு சூழ்நிலையும் தமிழ் மக்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்தால் விட்டுவைக்கவில்லை என்பதே வைரலாக அமைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க புதிய அரசியல் அமைப்பு என்ற மாயைக்குள் தமிழ்மக்களை இழுத்துவிட்டிருக்கிறது சிங்கள அரசு
யாப்பு சீர்திருத்தங்களும் விசாரணை ஆணைக்குழுக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வினை வழங்கவில்லை மாறாக அற்ப சொற்ப உரிமைகளையும் பறித்தே வந்துள்ளது

புதிதாக அமையப்போகும் அரசியல் அமைப்பும் இனிமேல் உயர்ந்தபட்ச கோரிக்கைகளை வெளிப்படுத்த முடியாமல் செய்யும் பொறியாகவே இந்த அரசியல் யாப்பு அமையப்போகின்றது என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலைகொண்டுள்ளது.அற்ப சலுகைகளை பெற்றுக்கொள்வதை உரிமை போராட்டமாக பறைசாற்றி பாசாங்கு செய்து கொள்வோர் இதற்கு முன்னர் ஏற்பட்ட ஏமாற்றங்களை வரலாற்றிலிருந்து அறிந்துகொள்ள முயல வேண்டும்
தற்போதிருக்கும் அரச போபறிமுறைக்குள் நின்றுகொண்டு எமக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாது மாறாக பன்னாட்டுத்தளத்தில் எமது கோரிக்கைகளையும் அரசியல் அபிலாசைகளையும் அழுத்தம் திருத்தமாக உரிமைக்குரல் எழுப்பி எமக்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும் வரை உறுதியோடு போராடவேண்டும்.

Yathursan Sornalingam
UK

SHARE