சாதனை வெற்றி கிடைத்தது இதனால்தான் – ஜீ எல் பீரிஸ்

அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பொன்றாகவே மக்கள் பார்க்கின்றனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதா நிராகரிப்பதா? என்ற கேள்வியே மக்கள் முன்னிருந்தது.

இதற்கு மக்கள் தக்க பதிலை அளித்ததன் ஊடாக தேர்தல் வரலாற்றில் எப்போதும் கிடைக்காத வெற்றியொன்று தற்பொது கிடைத்துள்ளதை காண முடிகின்றது.

இந்த வெற்றியின் பின்னர் நாட்டை ஆளுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லையென ஜீஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

SHARE