ஆயிரக்கணக்கான இந்திய கடற்றொழிலாளர்கள் விரட்டியடிப்பு!!

இலங்கை கடற்பரப்பில் வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு கடற் பகுதியில் நேற்று அவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

460க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE