சிம்பாப்வே அணி அபார வெற்றி

சிம்பாப்பே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற, 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் சிம்பாப்பே அணி 154 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய அந்த அணி, 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில், துடுப்பாட்டத்தில் பிரன்டன் டெயிலர் 125 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய, ஆப்கானிஸ்தான் அணி 30.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

SHARE