பனிக்கால ஒலிம்பிக் போட்டி – ஜேர்மன் ஆதிக்கம்!

தென்கொரியாவில் இடம்பெற்று வரும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஜேர்மன் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

3 தங்கம் 1 வெண்கல பதக்கம் அடங்களாக மொத்தம் 4 பதக்கங்களை பெற்று ஜேர்மன் தற்போது முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது இடத்தில், 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கல பதக்கம் அடங்களாக மொத்தம் 5 பதக்கங்களுடன் நெதர்லாந்து உள்ளது.

அதனை தொடர்நது 3வது இடத்தில் உள்ள நோர்வே ஒரு தங்கம், 4 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் அடங்களாக 8 பதக்கங்களை பெற்றுள்ளது.

அத்துடன், 4ஆம் இடத்தில் ஐக்கிய அமெரிக்காவுள்ளது.

5ஆம் இடத்தை அவுஸ்திரேலியா, பிரான்ஸ், தென்கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

SHARE