புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் ரொசேன் சில்வா முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் சபையின் புதிய டெஸ்ட் தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணியின் ரொசேன் சில்வா (Roshen Silva) முன்னேற்றம் கண்டுள்ளார்.

அவர் முதல் 50 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

பங்களாதேஸ் அணியுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பான துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் இந்த முற்னேற்றம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, ரொசேன் சில்வா 29 இடங்கள் முன்னேறி 49வது இடத்தை பெற்றுள்ளார்.

அந்த புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய அணித்தலைவர் ஸ்டிவன் சுமித் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE