கிம் ஜோனின் அதிரடி தீர்மானம்!

தென்கொரியாவுடன் நல்லிணக்கம் மற்றும் கலந்துரையாடல் இடம்பெறுவது அவசியம் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் அன் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவுக்கு சென்ற அவரின் சகோதரி உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவை தென் கொரியா சிறப்பாக வரவேற்றது.

அத்துடன், இருநாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை கட்டியெழுப்புவது அவசியம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே, வடகொரிய தலைவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இந்த முறை தென்கொரியாவில் இடம்பெறும் பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியாவும் பங்குகொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE