குசல் ஜனித்துக்கு பதிலாக குசல் மெண்டிஸ்!

இலங்கை – பங்களாதேஸ் அணிக்குளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டித் தொடரில் இருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா விலகியுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட உபாதை குணமாகாததால் அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இரண்டு போட்டிகள் அடங்கிய இந்த இருபதுக்கு 20 தொடருக்கான 15 பேர் அடங்கிய குழாமில் குசல் ஜனித் பெரேரா உள்வாங்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் இந்த போட்டியில் பங்கேற்க முடியாததால் அவருக்கு பதிலாக அந்த குழாமில் குசல் மெண்டிஸ் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டித் தொடர் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

SHARE