இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்து!பலர் காயம்

முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் காயம் – படங்கள்

முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளனர்.

பொகவந்தலாவையில் இருந்து மஸ்கெலிய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் பொகவந்தலாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு அதில் ஒருவர் பாரதூரமான நிலையில் டிக்கோயா மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த போதே அவர்கள் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

SHARE