இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முடிவு வெளியானது

நுவரெலிய மாவட்டத்தில் தமது கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடனும் பெரும்பான்மை பலத்தை பெறாத உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடனும் இணைந்து ஆட்சியமைக்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

SHARE