கி.சிவனேசன் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

முன்னால் யாழ்மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கி.சிவனேசன் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் 06 ஆம் திகதி ஒரு சிவராத்திரி நாள் அன்று ஸ்ரீலங்காப்படையினரின் ஆழ ஊடுருவும் படையினரின் கிழைமோர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இவருக்கு விடுதலைப்புலிகளால் மாமனிதர் என்ற விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
இவரின் உடலம் மல்லாவியில் உள்ள அனஞ்சயன் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் பத்தாவது சிரார்த்த தினத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் த.தே.ம.முன்னணியின் துணுக்காய் இணைப்பாளர் பாலசுப்பிரமணியம்,தமிழர்விடுதலை கூட்டணியின் உறுப்பினர் புண்ணியநாதன், வவுனிக்குளம் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளர் றொபின், உள்ளிட்டவர்களின் ஏற்பாட்டில் சிரார்த்த தினம் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன் அவர்கள் நினைவுரையினை நிகழ்தியுள்ளார்.
அவர் நினைவுரையில் ..
முன்னாய் யாழ்மாவட்ட நாடாளமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவர்கள் சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மாமனிதர் சிவனேசன் அவர்கள் தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு இருந்த பொழுது பேச்சுக்களுக்கு அரசியல் ரீதியில் வலுச்சேர்க்கின்ற செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.
தமிழர்களின் உரிமை போராட்டத்தில் உறுதியாக செயற்பட்டுக்கொண்டு இருந்தவர் மறுபக்கத்தில் சமூகஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் மிகவும் உக்கிரமாக குரல் கொடுத்தவர் தன் சமூகம் சார்ந்து மிக நீண்டகாலமாக மக்களின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தவர்;.
தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் 22 பேர் பாராளமன்ற உறுப்பினராக இருந்தபோது நான்கு ஆண்டுகள் எங்களுடன் அன்பும் பண்பும் உறுதியும் மிக்க ஒருவராக சேவை செய்தவர் இப்படிப்பட்ட ஒருவரை எமது தேசம் இழந்தது என்பது அவருடைய குடும்பத்திற்கு மட்டுமல்ல எங்களுடைய ஒட்டுமொத்த விடுதலைக்காக போராடிய தமிழ் சமூகத்திற்கு ஈடுசெய்யப்படமுடியாத பாரிய இழப்பு.
தமிழ்மக்களின் தாய விடுதலையில் உறுதியான பற்றுக்கொண்ட ஒருவர் அவர் தமிழர்களின் அடிப்படை கொள்கையான தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்பவற்றை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கவில்லை அவரின் பயணத்தில் சிங்கள பௌத்த பேரினவாதம் சூழ்சியான முறையில் அவரை அன்று படுகொலை செய்துள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்க்கின்ற வேளையில் அவரின் இலட்சியம் நிறைவேற வேண்டும் அதற்காக நாங்கள் அவரின் பாதையில் உறுதியாக பயணிப்போம் என்று உறுதிஎடுத்துக்கொள்கின்றோம்  என்றும் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
SHARE